மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலி

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலியானார்.
மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலி
Published on

சேத்துப்பட்டு

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மேதி பலியானார்.

சேத்துப்பட்டு, பழம்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவரது மகன் ஞானசேகர் (வயது 22). நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சேத்துப்பட்டு, அருகே உள்ள கின்னனூர், கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்.

ஆரணி-செஞ்சி சாலையில் செம்மாம்பாடி, கூட்ரோடு அருகே வந்தபோது சேத்துப்பட்டில், இருந்து ஆரணி, நோக்கி சென்ற கார் ஞானசேகர், மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஞானசேகர், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த சேத்துப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஞானசேகரின் தந்தை ஆசீர்வாதம் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com