முசிறியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்க முயன்ற வாலிபர்

முசிறியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்க முயன்ற வாலிபரை கண்டித்து பஸ்களை இயக்க மறுத்த டிரைவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்க முயன்ற வாலிபர்
Published on

முசிறியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்க முயன்ற வாலிபரை கண்டித்து பஸ்களை இயக்க மறுத்த டிரைவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தாக்க முயற்சி

முசிறி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கொளக்குடிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட தயாராக நின்றது. அப்போது, அந்த பஸ்சில் வெள்ளூர் கீழத்தெருவை சேர்ந்த அமுல்ராஜ் மகன் ரவி (வயது 25) என்பவர் மது போதையில் ஏறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அவர் போதையில் காடுவெட்டி பகுதியைச் சேர்ந்த கண்டக்டர் விசுவநாதனை தரக்குறைவாகி பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் பஸ் நிலையத்தில் நின்ற மற்ற அரசு பஸ்களின் டிரைவர்கள் பஸ்களை இயக்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஸ் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் பஸ்களை இயக்கினர். மேலும் அரசு பஸ் கண்டக்டரை தாக்க முயன்ற ரவியை தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com