லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி
Published on

சேலம் அருகே வீராணம் அருகே பூவனூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தனபால் மகன் ராஜா (வயது 30). இவர், நேற்று முன்தினம் இரவு அயோத்தியாப்பட்டணம் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் நள்ளிரவில் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். சேலம்- அரூர் பைபாஸ் சாலையில் பருத்திக்காடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, எதிரே அரூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு லாரி வந்தது. அந்த லாரி, இளையராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com