லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதியதில் வாலிபர் பலியானார்
லாரி மோதி வாலிபர் பலி
Published on

திருச்சி இனாம்குளத்தூரை அடுத்த பெரியஆலம்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து தனது வீட்டிற்கு மொபட்டில் சென்றார். நவலூர்குட்டப்பட்டு அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com