விஷ இலையை தின்ற வாலிபர் சாவு

விஷ இலையை தின்ற வாலிபர் இறந்தார்.
விஷ இலையை தின்ற வாலிபர் சாவு
Published on

கீரனூர் அருகே உப்பிலியக்குடி தட்டாம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் பாண்டி (வயது 32). இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வயிற்று வலி தாங்க முடியாமல் விஷ இலையை தின்றுள்ளார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com