பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

மந்தாரக்குப்பம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
பாலத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Published on

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணி அருகே உள்ள ரெயில்வே பாலத்துக்கு அடியில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த அருள்மணி மகன் அன்புமணி(வயது 29) என்பதும், குடிப்பழக்கம் இருந்ததால் மது அருந்திவிட்டு பாலத்தின் மீது நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்து இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அன்புமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com