குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் பலியானார்.
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
Published on

சென்னை, 

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் வணிக வளாகம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி வேலைசெய்து வருகின்றனர். கடந்த 16-ந்தேதி இங்கு பணியாற்றி வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் (வயது 23) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார்.

பின்னர் குடிபோதையில் கட்டிடத்தின் மாடி பகுதிக்கு படிக்கட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதில், அவரின் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பவன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com