15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கட்டாய திருமணம் செய்த வாலிபர்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கட்டாய திருமணம் செய்த வாலிபர்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மகளிர் ஊர்நல அலுவலர் சாந்தா, சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், பரங்கிப்பேட்டை சின்னூர் பகுதியை சேர்ந்த துரை மகன் முத்து (வயது 20) என்பவர் கிள்ளையை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை சிதம்பரத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்று கடந்த 14.9.2023 அன்று கட்டாய திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளார்.

ஆகவே சிறுமியை கர்ப்பமாக்கி, கட்டாய திருமணம் செய்த முத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் முத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com