விநோதமான ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி சென்ற வாலிபர் - ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்..!

குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடினர்.
விநோதமான ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டி சென்ற வாலிபர் - ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்..!
Published on

தென்காசி,

தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் விநோதமான வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

இதையடுத்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அவரின் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com