லாட்டரி சீட்டுகள் கடத்திய வாலிபர் கைது

கூடலூரில் லாட்டரி சீட்டுகள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாட்டரி சீட்டுகள் கடத்திய வாலிபர் கைது
Published on

 கேரள மாநிலம் குமுளியில் இருந்து மொத்தமாக லாட்டரி சீட்டுகளை விலைக்கு வாங்கி தமிழகத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக எல்லை பஸ் நிறுத்தம் பகுதியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேனிக்கு செல்லும் பஸ் நிறுத்தத்தில் தனியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குமுளி 6-ம் மைல் பகுதியை சேர்ந்த பாபு (வயது 31) என்பதும், ரூ.81 ஆயிரத்து 600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை இடுப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com