மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிக்கினார்

விக்கிரமசிங்கபுரம் அருகே மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிக்கினார்.
மொபட்டில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் சிக்கினார்
Published on

நெல்லை உணவுபொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நேற்று அம்பை- பாபநாசம் ரோட்டில் சிவந்திபுரம் பஸ்நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மொபட்டில் 2 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வாலிபர் ஒருவர் வந்தார். அவரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அம்பை புதுகாலனியை சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (வயது 28) என்பதும், அவர் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com