கஞ்சா விற்ற வாலிபர் பிடிபட்டார்

கம்பத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் பிடிபட்டார்
Published on

கம்பம் புதிய பஸ்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த அஜய்குமார் (வயது 23) என்றும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அஜய்குமாரை போலீசார் கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com