தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார்
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலி
Published on

ஜோலார்பேட்டை

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயிலில் அடிபட்டு பலியானார்

குடியாத்தம்-வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்கவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக காட்பாடி நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே இறந்தார். அரது உடல் ரெயிலில் சிக்கியதில் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டதில் சென்றது இதனால் அவர் அணிந்து இருந்த உடைகள் ரெயிலில் இழுத்து சென்றது இதனால் உடைகள் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் மாநிறம் உடையவர். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com