பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்

பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை காவல் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் போலீஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்து உள்ளார். விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. நெல்லைக்கு வந்து தனது விசாரணையை தொடங்கினார்.

இந்த நிலையில், பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர்களாக மகேஷ், சுஜி ஆனந்த், செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல்ர்களின் இடங்களில் புது நியமனம் செய்யப்படுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com