ராஜாக்கமங்கலம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்

ராஜாக்கமங்கலம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
ராஜாக்கமங்கலம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
Published on

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

ஆலையில் தீ

ராஜாக்கமங்கலம் அருகே மேலசங்கரன்குழி வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 56). இவர் கணபதிபுரத்தை அடுத்துள்ள கன்னக்குறிச்சி பகுதியில் சொந்தமாக தும்பு ஆலை நடத்தி வருகிறார். இங்கு காய போட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தும்புகளில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனைக் கண்ட தொழிலாளர்கள் ஓடி சென்று அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பற்றி வேகமாக பரவியது.

தீயை அணைக்க போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில், குளச்சல், திங்கள்சந்தை ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் சத்தியகுமார் தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் மற்றும் வீரர்கள் விரைந்து வந்தனர்.

இந்த தீயை அணைக்க வீரர்கள் போராடினர். இந்த பணி விடிய, விடிய நடந்தது. இந்த தீ விபத்தில் அருகில் இருந்த 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கருகி உள்ளன. பயங்கர தீ விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com