மருத்துவமனை சென்று திரும்பிய பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

சோளிங்கர் அருகே மருத்துவமனை சென்று திரும்பிய பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் நகையை பறித்து விட்டு தப்பினர்.
மருத்துவமனை சென்று திரும்பிய பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
Published on

சோளிங்கர்

சோளிங்கர் அருகே மருத்துவமனை சென்று திரும்பிய பெண்ணிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் நகையை பறித்து விட்டு தப்பினர்.

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி மனைவி கவுசல்யா (வயது 23). இவரது தங்கை பூங்கொடி. இவர்கள் இருவரும் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பஸ்சில் திரும்பிய அவர்கள் கே.ஜி.கண்டிகையில் இறங்கினர்.

அங்கிருந்து பூங்கொடி அவரது தம்பி பரத்துடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கவுசல்யா தனக்கு தெரிந்தவரின் மோட்டார்சைக்கிளில் சென்று அக்கச்சிகுப்பம் கூட்ரோடு அருகே இறங்கி நடந்து சென்ற கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் கவுசல்யா அணிந்திருந்த தாலி சங்கிலியை பிடித்து இழுத்து அறுத்தனர். நல்லவேளையாக தாலி மட்டும் அவர் கழுத்தில் நின்றுவிட்டது. எனினும் 3 பவுன் தாலி சரடு 3 பேரின் கைகளில் சிக்கிக்கொண்டது. அந்த நகையுடன் 3 பேரும் தப்பி விட்டனர். இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கவுசல்யா அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com