ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு
Published on

சென்னை.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று  காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.

சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில், சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார். அதன்பின் விமானத்தின் டயர்களை பரிசோதித்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com