நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்; தமிழகத்தில் 2 நாட்களில் மொத்தம் 26 பேர் வேட்பு மனு தாக்கல்

நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மொத்தம் 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்; தமிழகத்தில் 2 நாட்களில் மொத்தம் 26 பேர் வேட்பு மனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் அளித்த பேட்டியில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படும். வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24ந்தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. வேட்புமனு தாக்கல் செய்ய 26ந்தேதி கடைசி நாள் ஆகும் என கூறினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மற்றும் சட்டசபைக்கான தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல் நாளான நேற்று 20 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வடசென்னையில் 4, தென்சென்னையில் 3, திருப்பூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 2 பேர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவும் அடங்கும்.

இரண்டாவது நாளான இன்று 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 2 நாட்களில் மொத்தம் 26 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சட்டசபை இடைத்தேர்தலுக்கு இன்று யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com