

நாட்டறம்பள்ளியை அடுத்த பைனபள்ளி பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகன் ரவி (வயது 40), மர வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பர்கூர் பகுதியிலிருந்து பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நாட்டறம்பள்ளி அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி வளர்மதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.