

சென்னை அண்ணா நகர், 2-வது அவென்யூ டவர் பூங்கா மற்றும் அய்யப்பன் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள், டிரான்ஸ்பார்மரில் எரிந்த தீயை அணைத்தனர்.
உயர் மின் அழுத்தம் காரணமாக டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.