நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

ஸ்ரீபெரும்புதுர் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
Published on

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 40 டன் எடை கொண்ட நிலக்கரியை ஏற்றிக்கொண்டு லாரி ராணிப்பேட்டை மாவட்டம் ஆர்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேற்று புறப்பட்டது. இந்த லாரியை விழுப்புரத்தை சேர்ந்த டிரைவர் பிரபாகரன் (வயது 31) ஓட்டிச்சென்றார். சென்னைபெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதுர் அருகே சாலை விரிவாக்கம் பணி நடப்பதால் சாலை அங்கேங்கே பள்ளம் இருந்து உள்ளது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுர் அருகே லாரி சென்றபோது பள்ளமான பகுதியில் லாரியின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள டேங்கர் இறங்கியது. இதனால் லாரியில் பொருத்தப்பட்டிருந்த டேங்கர் தனியாக உடைந்து சாலையோரம் கவிந்தது. அதிஷ்வசமாக அப்போது அருகே வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்தால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, லாரியில் இருந்து கழன்று விழுந்த டேங்கர் பகுதியை கிரேன் உதவியுடன் மீட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com