பரபரக்கும் அரசியல் களம்.. விஜயின் சுற்றுப்பயண விவரம் வெளியானது.!


பரபரக்கும் அரசியல் களம்.. விஜயின் சுற்றுப்பயண விவரம் வெளியானது.!
x
தினத்தந்தி 9 Sept 2025 12:49 PM IST (Updated: 9 Sept 2025 3:27 PM IST)
t-max-icont-min-icon

விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.

சென்னை,

தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;


வ.எண்

தேதி

கிழமை

மாவட்டம்

1

13-09-2025

சனிக்கிழமை

திருச்சி, பெரம்பலூர், அரியலூர்

2

20-09-2025

சனிக்கிழமை

நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை

3

27-09-2025

சனிக்கிழமை

திருவள்ளூர், வட சென்னை

4

04-10-2025

சனிக்கிழமை

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

5

05-10-2025

ஞாயிற்றுக்கிழமை

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

6

11-10-2025

சனிக்கிழமை

குமரி, நெல்லை, தூத்துக்குடி

7

18-10-2025

சனிக்கிழமை

காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

8

25-10-2025

சனிக்கிழமை

தென் சென்னை, செங்கல்பட்டு

9

01-11-2025

சனிக்கிழமை

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்

10

08-11-2025

சனிக்கிழமை

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

11

15-11-2025

சனிக்கிழமை

தென்காசி, விருதுநகர்

12

22-11-2025

சனிக்கிழமை

கடலுர்

13

29-11-2025

சனிக்கிழமை

சிவகங்கை, ராமநாதபுரம்

14

06-12-2025

சனிக்கிழமை

தஞ்சாவூர், புதுக்கோட்டை

15

13-12-2025

சனிக்கிழமை

சேலம், நாமக்கல், கரூர்

16

20-12-2025

சனிக்கிழமை

திண்டுக்கல், தேனி, மதுரை






1 More update

Next Story