

ஆவடி,
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது.
ஆவடி பேருந்து நிலையம் அருகே தீபாவளியையொட்டி நேற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறி, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாகனம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ மளமளவென பரவி வாகனம் முழுவதும் எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பட்டாசு தீப்பொறியால் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.