மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் தீவாக காட்சி அளிக்கும் கிராமம்

ஏரியூர் அருகே மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் தீவாக கிராமம் காட்சி அளிக்கிறது. கழுத்து அளவு தண்ணீரை தினமும் கடந்து செல்ல வேண்டிய இருப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் தீவாக காட்சி அளிக்கும் கிராமம்
Published on

ஏரியூர்:-

ஏரியூர் அருகே மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் தீவாக கிராமம் காட்சி அளிக்கிறது. கழுத்து அளவு தண்ணீரை தினமும் கடந்து செல்ல வேண்டிய இருப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தீவான கிராமம்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காவிரி கரையோர கிராமம் நாகமரை இந்திரா நகர். இந்த கிராம பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமமானது, மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் உள்ளது. இதனால் எப்போது மேட்டூர் அணை 120 அடியை எட்டினாலும் இந்த கிராமம் தீவு போல் ஆகி விடும்.

அங்கிருந்து மக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியூர் செல்ல வேண்டும் என்றால் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கிதான் செல்ல வண்டும். இல்லை என்றால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

மாணவ- மாணவிகள் அவதி

காலயில் அவசரமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் நபர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வது இயலாத காரியம். எனவே இந்த கிராம மக்கள் கழுத்து அளவு தண்ணீரை கடந்துதான் தினமும் தங்களது அன்றாட வாழ்க்கையை தொடங்குகின்றனர்.

அதுவும் பள்ளி குழந்தைகளை தங்களது பெற்றோர் தோளில் சுமந்துதான் தண்ணீரை கடக்க வேண்டிய உள்ளது. நீண்ட நாட்களாகவே இந்த கிராம மக்கள் இப்படித்தான் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாலம் அமைக்க கோரிக்கை

எனவே பாலம் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க வருவோர் உறுதி அளிப்பதோடு சரி, அதன்பிறகு அவர்களை கண்டுகொள்வது இல்லை என்று ஆதங்கப்படுகின்றனர் கிராம மக்கள்.

பாலம் அமைக்காவிட்டாலும் பரவாயில்லை. தரைமட்ட பாலமாவது அமைத்து தர மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த கிராம மக்களின் நீண்ட கால ஏக்கமாக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com