பரபரக்கும் தேர்தல் களம்: மூன்று தி.மு.க. அமைச்சர் தொகுதிகளில் மோதும் அ.ம.மு.க.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பரபரக்கும் தேர்தல் களம்: மூன்று தி.மு.க. அமைச்சர் தொகுதிகளில் மோதும் அ.ம.மு.க.
Published on

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில், அ.ம.மு.க.வுக்கான தொகுதிகளாக நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், சைதாப்பேட்டை, மடத்துக்குளம், பூந்தமல்லி, திருச்சி மேற்கு, பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னையில் வெளியிட்டார். இதன்படி நாங்குநேரி - இசக்கிமுத்து, ஒட்டப்பிடாரம்- சுந்தர் ராஜன், சைதாப்பேட்டை- செந்தமிழன், மடத்துக்குளம் - சண்முகவேலு, பூந்தமல்லி (தனி) - ஏழுமலை, திருச்சி மேற்கு- தொட்டியம் ராஜசேகரன், பெரியகுளம் (தனி) - கதிர்காமு, மன்னார்குடி - எஸ்.காமராஜ், திருவையாறு - வேலு கார்த்திகேயன், காரைக்குடி - தேர்போகி பாண்டி, திருப்பத்தூர் - ஞானசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் அறிவிப்பை தொடர்ந்து, அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையையும் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டார்.

இந்நிலையில் மூன்று தி.மு.க. அமைச்சர்கள் தொகுதிகளில் அ.ம.மு.க. மோத உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன், மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா, திருச்சி மேற்கு - கே.என். நேரு ஆகியோர் எம்.எல்.ஏக்களாக உள்ள தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com