தகராறு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

தகராறு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தகராறு வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா புதுவலசல் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் கார்த்திக் (வயது 23). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினரை சாதி பெயரை சொல்லி திட்டியதால் ஆலங்குடி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் சம்பந்தப்பட்ட கார்த்திக் துபாய் நாட்டிற்கு சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து துபாயில் இருந்து நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த கார்த்திக்கை அங்குள்ள போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற ஆலங்குடி போலீசார் கார்த்திக்கை கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com