ஆசிய ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிய ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
Published on

7-வது ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான கோப்பை "பாஸ் தி பால்" என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் நேற்று திருச்சிக்கு வருகை தந்தது. திருச்சி அண்ணா விளையாட்டரங்கிலுள்ள செயற்கை இழை ஆக்கி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் கோப்பையை வரவேற்று, கோப்பை, மஸ்காட் உருவசின்னத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். மேலும், 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு, அமைச்சர்கள் மரக்கன்றுகளை விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், மற்றும் விளையாட்டு வீரர் -வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com