பணியின்போது 50 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வெல்டர் சாவு

தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் 50 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பணியின்போது 50 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வெல்டர் சாவு
Published on

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிகாரிலால் (வயது 35). இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்றில் தங்கி, ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உத்தரபிரதேசத்தில் உள்ளனர். இவர் நேற்று அதிகாலை, தொழிற்சாலைக்குள், கிரேனில் நின்றபடி, சுமார் 50 அடி உயரத்தில் உள்ள பர்னஸ் அருகே வெல்டிங் வேலையை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாரத விதமாக அங்கிருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிகாரிலால், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பிகாரிலால் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com