ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

ஓட்டுனரின் சாதுர்யத்தால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
Published on

ராசிபுரம்,

ராசிபுரத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் ராசிபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். ஓட்டுனரின் சாதுர்யத்தால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com