

பவானிசாகர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் ரோட்டில் வனத்துறையினரின் ஜீப் சென்று கொண்டிருந்தது. வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று திடீரென வனத்துறையினரின் ஜீப்பை வழிமறித்தது. பின்னர் ஜீப்பை காட்டு யானை துரத்தியது. அப்போது ஜீப் டிரைவர் லாவகமாக வாகனத்தை இயக்கியதால் அந்த யானை கண்டு அஞ்சியபடி பின்னோக்கி ஓடியது. சிறிது தூரம் வரை பின்னாக்கி ஓடிய பிறகு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.