கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
Published on

அன்னூர்

அன்னூர் அருகே குன்னத்தூராம்பாளையம் தென்னவடை தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி சாந்தாமணி (வயது 53). இவருக்கு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாந்தாமணி சம்பவத்தன்று அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com