விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

சென்னையில் விளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்த பெண் உயிரிழந்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சென்னை தியாகராயநகர், டாக்டர் நாயர் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பன் (60 வயது). இவர் கப்பலுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஆண்டாள் (58 வயது). இவர் கடந்த 4-ந்தேதி வீட்டில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றினார். அப்போது ஒரு அகல் விளக்கு மீது அவரது சேலை பட்டு சேலையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதை ஆண்டாள் கவனிக்காததால் தீ, விறுவிறுவென அவர் சேலை முழுவதும் பிடித்து எரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வலியால் கத்தி கூச்சலிட்டார். அப்போது, அங்கிருந்தவர்கள் ஆண்டாளை மீட்டனர். பலத்த காயமடைந்த அவரை, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆண்டாள் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com