திட்டக்குடி அருகேஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்அழகான ஆண் குழந்தை பிறந்தது

திட்டக்குடி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
திட்டக்குடி அருகேஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்அழகான ஆண் குழந்தை பிறந்தது
Published on

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள கொரக்கவாடியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவரது மனைவி மல்லிகா (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள், ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வந்த ஆம்புலன்சில் மல்லிகாவை அழைத்துக் கொண்டு மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புறப்பட்டனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் திடீரென மல்லிகாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் டிரைவர் சண்முகம், ஆம்புலன்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்சில் இருந்த அவசர கால நிபுணர் ஆனந்தகுமார், அவருக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். இதில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக தாயும்-சேயும் மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே தகவல் தெரிவித்த உடனே ஆம்புலன்சுடன் விரைந்து வந்த டிரைவரையும், பிரசவம் பார்த்த அவசர கால நிபுணரையும் மல்லிகாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com