மோட்டார் சைக்கிள் மீது பெண் ஓட்டி வந்த கார் மோதல் - 4 பேர் காயம்

சென்னை போரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பெண் ஓட்டி வந்த கார் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது பெண் ஓட்டி வந்த கார் மோதல் - 4 பேர் காயம்
Published on

சென்னை போரூர் அடுத்த பெரிய கொளுத்துவான்சேரியை சேர்ந்தவர் முரளி. இவர், தன்னுடைய மனைவி மகேஸ்வரி மற்றும் 2 மகள்களுடன் நேற்று இரவு அய்யப்பன்தாங்கலில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அய்யப்பன்தாங்கல்-பரணிபுத்தூர் சாலையில் சென்றபோது அந்த பகுதியில் உள்ள தெருவில் இருந்து பெண் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள வீட்டின் சுவரில் மோதி நின்றது. கார் மோதியதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. காரின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த முரளி, மகேஸ்வரி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்துக்குள்ளான கார், மோட்டார்சைக்கிளை மீட்டனர். மேலும் விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த குயின் விக்டோரியா என்ற பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com