மளிகை கடைக்கு சென்ற பெண் பாம்பு கடித்து சாவு

செங்கோட்டையில் மளிகை கடைக்கு சென்ற பெண் பாம்பு கடித்து இறந்தார்.
மளிகை கடைக்கு சென்ற பெண் பாம்பு கடித்து சாவு
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் மேலப்பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மனைவி சுபைதாள் (வயது 65). இவர் நேற்று மதியம் வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க நடந்து சென்றார். அப்போது மளிகை கடை அருகில் கிடந்த குப்பையில் இருந்த விஷப்பாம்பு திடீரென்று சுபைதாளை கடித்தது.

இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபைதாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com