செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் 'திடீர்' சாவு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீரென பலியானார். இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் 'திடீர்' சாவு
Published on

பிரசவத்திற்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 32). இவரது மனைவி பிரமிளா (29). கடந்த 3-ந்தேதி பிரமிளாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏழுமலை அழைத்துச் சென்றார். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு 4-ந் தேதி பிரமிளாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து தாய்- சேய் இருவரையும் டாக்டர்கள் வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் வாக்குவாதம்

மறுநாள் மாலை பிரமிளாவிற்கு திடீரென வயிறு வீங்கி வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறி மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர். இதனையடுத்து பிரமிளாவை அவரது உறவினர்கள் பார்க்க சென்ற போது சுயநினைவு இன்றி இருந்ததாக தெரிகிறது.

கடந்த 5 நாட்களாக கண்விழிக்காத நிலையில் நேற்று பிரமிளா உயிரிழந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமிளாவின் உறவினர்கள் பயிற்சி டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் பிரமிளா உயிரிழந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டாக்டர்கள் சமாதானப்படுத்தி உடலை ஓப்படைத்தனர். இந்த சம்பவத்தால்ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com