ஆவடியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

ஆவடியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
Published on

ஆவடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (வயது 48). கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக மாயகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குடிபோதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மாயகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாயகிருஷ்ணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com