தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.
Published on

தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பலியானார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அக்ரஹாரம் பெரியாங்குட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர்குமார் (வயது 53), தாழிலாளி. இவர் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு ஜோலார்பேட்டை -திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com