அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மின் மோட்டார் திருடிய இளம் ஜோடி

அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மின் மோட்டார் திருடிய இளம் ஜோடி, மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மின் மோட்டார் திருடிய இளம் ஜோடி
Published on

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 55-வது வார்டு தங்கராஜ் நகர் 2-வது குறுக்கு தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இளம் ஜோடிகள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மின்மோட்டரை திருடி கொண்டு தப்பி சென்றனர்.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து மின்மோட்டார் திருடி செல்லும் இந்த ஜோடி யார்? என்பது குறித்து பீர்க்கன்கரனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

இந்த இளம் ஜோடி மின் மோட்டார் உடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com