விஷப்பூச்சி கடித்து இளம்பெண் சாவு

விஷப்பூச்சி கடித்து இளம்பெண் உயிரிழந்தார்.
விஷப்பூச்சி கடித்து இளம்பெண் சாவு
Published on

விழுப்புரம் அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகள் அம்சவள்ளி (வயது 17). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர், தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய வலது கால் முட்டியில் ஏதோ விஷப்பூச்சி கடித்து விட்டதாக தெரிகிறது. உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com