இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரியில் இளம்பெண் மாயம் ஆனார்.
இளம்பெண் மாயம்
Published on

கிருஷ்ணகிரி தாலுகா கெட்டூரை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கடந்த 8-ந் தேதி பெத்தனப்பள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர். அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தென்னமங்கலத்தை சேர்ந்த அப்பு (25) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com