மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் மாயம்

மாரண்டஅள்ளி அருகே இளம்பெண் மாயம்
Published on

மாரண்டஅள்ளி

மாரண்டஅள்ளி இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (27). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜோதிக்கும், அவருடைய மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.

பின்னர் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மனைவி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது மனைவியை கண்டுபிடித்து தர கோரி மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com