ஏரியூர் அருகே மாமியாருடன் தகராறு; இளம்பெண் மாயம்

ஏரியூர் அருகே மாமியாருடன் தகராறு; இளம்பெண் மாயம்
Published on

ஏரியூர்

ஏரியூர் அருகே மேல்காடு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி தவமணி (வயது 32). தவமணிக்கும், அவருடைய மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ், இருவரையும் சமாதானம் செய்து விட்டு வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்று விட்டார். இதற்கிடையே வீடு திரும்பிய கோவிந்தராஜ், வீட்டில் தவமணி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோவிந்தராஜ், பெரும்பாலை போலீசில் புகார் சய்தார். அதன்பேரில் போலீசார் தவமணியை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com