வளர்த்த நாய் இறந்ததால் இறுதி சடங்கிற்காக லண்டனிலிருந்து வந்த வாலிபர்

ஊர் திரும்பிய லோகேஷ். தனது செல்ல பிராணியின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
 லண்டனிலிருந்து வந்த வாலிபர்
Published on: 

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் பொன்னேரிகரை இந்திரா நகரைச் சேர்ந்த பழனிராஜ்- ஞானசவுந்தரி தம் பதியினர், தங்கள் வீட்டில் 'வீரூ' என்ற பெயரில் உயர் ரக நாயை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்தனர். இவர்களது மகன் லோகேஷ், லண்டனில் பணிபுரிந்து கொண்டே மேல்படிப்பு படித்து வருகிறார். லோகேஷும், வீரூவும் அண்ணன்-தம்பி போல பாசத்துடன் பழகியுள்ளனர்.

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் அந்த நாய் உயிரிழந்தது. இதை அறிந்த லோகேஷ், உடனடியாக பல லட்சம் ரூபாய் செலவில் விமான டிக்கெட் எடுத்துக்கொண்டு லண்டனில் இருந்து நேற்று காலை காஞ்சீபுரம் வந்தார்.

ஊர் திரும்பிய லோகேஷ். தனது செல்ல பிராணியின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து, மனிதர்களுக்கு செய்வது போலவே அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டு 'வீரூ'வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வளர்த்த நாய்க்காக லண்டனிலிருந்து விமானத்தில் வந்த வாலிபரின் பாசம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com