

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள இந்தளூர் கீழஅரிஜன தெருவை சேர்ந்த கலைவாணன். இவரது மகன் பழனிச்சாமி (23 வயது). இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அந்த பெண் உயிரிழந்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பூதலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.