ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் பைக் ஓட்டிச்சென்ற வாலிபர் - வைரலாகும் வீடியோ


ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் பைக் ஓட்டிச்சென்ற வாலிபர் - வைரலாகும் வீடியோ
x

ஊட்டி மலைரெயில் பாதையில் அத்துமீறி தண்டவாள பகுதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றுள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மலைரெயில் பாதையில் ரீல்ஸ் மோகத்தால் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச்சென்றதுடன், புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில் வீடியோ எடுத்து பதிவிட்டது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பின்னர் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் ஊட்டி மலைரெயில் பாதையில் அத்துமீறி தண்டவாள பகுதியில் மோட்டார் சைக்கிளை ஓட்டிசென்றும், தண்டவாளத்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி புகைப்படம் எடுத்தும் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story