சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல்லில் சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை
Published on

திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்தவர் சகாயஆரோக்கியராஜ் (வயது 28). இவர், கடந்த ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். இதையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சகாய ஆரோக்கியராஜூக்கு போக்சோ சட்டத்தில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதமும், குழந்தை திருமண தடை சட்டத்தில் ஓராண்டு சிறை மற்றும் ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டம் (கடத்தல்) 366-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com