விமானத்தின் அவசர கால கதவை இளைஞர் திறக்க முயன்றதால் பரபரப்பு


A young man who tried to open the emergency door of a plane caused a stir.
x
தினத்தந்தி 28 July 2025 10:18 AM IST (Updated: 28 July 2025 10:41 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

இண்டிகோ விமானம் ஒன்று இன்று சென்னையில் இருந்து துர்காப்பூருக்கு ஊழியர்கள் உள்பட 164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது 27 வயதான இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றிருக்கிறார்.

இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது. தான் அவசர கால கதவை திறக்கும் பட்டனை தெரியாமல் அழுத்தியதாக இளைஞர் தெரிவித்தார். அவரின் விளக்கத்தை ஏற்காத ஊழியர்கள் விமானத்தில் இருந்து அவரை கீழே இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டது.

விசாரணையில், அவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கிண்டி ஐஐடியில் படித்து வருவதுவும், சொந்த வேலை காரணமாக துர்காப்பூர் செல்லவிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானத்தின் அவசர கால கதவை இளைஞர் திறக்க முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 More update

Next Story