முயல் வேட்டைக்கு நாட்டு துப்பாக்கியுடன் சென்ற வாலிபர் கைது

கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றார்.
கைது
Published on: 

வானூர்,

விழுப்புரம் மாவட்டம், வானூர் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரங்கநாதபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நாட்டு துப்பாக்கி

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்த ஒரு வரை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றார். இதையடுத்து போலீசார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாட்டுத் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியோடியது புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 31) என்பதும், முயல்வேட்டைக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X