கடலில் சங்கு குளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சங்குகுளி தொழிலாளி ஒருவர், சக தொழிலாளர்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்குகுளிக்க சென்றார்.
கடலில் சங்கு குளிக்க சென்ற வாலிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
Published on

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் பொன்முனீஸ்வரன் (வயது 32). சங்குகுளி தொழிலாளியான இவர் கடந்த 12ம் தேதி படகில் சக தொழிலாளர்கள் 5 பேருடன் கடலுக்குள் சங்கு குளிக்க சென்றார்.

பின்னர் அவர்கள் கரை திரும்பும் போது பொன் முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை திரேஸ்புரம் கடற்கரைக்கு வந்து பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com